பொது செய்தி

தமிழ்நாடு

'பரம்பொருள் வழி காட்டுவார்' :பூண்டி அடிகளார் உறுதி

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதசுவாமி திருமடம், சுந்தர்ராஜ அடிகளார் கூறியதாவது:உலகெங்கும் வாழும், பல கோடி இந்துக்களின் வேத மந்திரமாக கந்த சஷ்டி கவசம் ஒலித்து வருகிறது. முருகப் பெருமானை உள்ளத்தில் நிறுத்தி வழிபடும் பக்தர்களின் நெஞ்சில், கருப்பர் கூட்டத்தின் கொச்சையான கருத்து, இடியாய் இறங்கி உள்ளது.அவரவர் மதம், அவரவர் நம்பிக்கை என்ற அடிப்படையில், இந்து தர்மம் தழைத்தோங்கி வருகிறது.



latest tamil news




இதில், தேவையற்ற குழப்பத்தை இவர்கள் ஏன், ஏற்படுத்துகின்றனர் என்பது தெரியவில்லை. கந்த சஷ்டி கவசத்தில், அளவற்ற கருத்து உள்ள நிலையில், வேண்டுமென்ற திரித்து கூறியது கண்டிக்கத்தக்கது.அந்த கூட்டத்துக்காக சிலர் குரல் கொடுப்பது வேதனையிலும் வேதனை. எங்கும் நிறைந்துள்ள எம்பெருமான் பரம்பொருள் இந்த கூட்டத்துக்கு ஒரு வழி காட்டத்தான் போகிறார். கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதை, வன்மையாக கண்டிக்கிறோம்.இப்போது, முன்பை விட அதிகளவில் பக்தர்கள் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய துவங்கியுள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-ஜூலை-202013:44:26 IST Report Abuse
Thiagarajan Kodandaraman காசு சம்பாதிக்க மட்டும்தான் இந்த ஆன்மீக பேச்சாளர்கள் மேடையை விட்டு இறங்கியதும் நாத்தீக வாதிகளின் அடிமைகள் என்பதும் உயிருக்கு பயந்த கொடூர ஆட்கள் என்பதும் மக்களுக்கு புரிய வந்துள்ளது
Rate this:
Cancel
Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா
21-ஜூலை-202012:58:10 IST Report Abuse
Natarajan Dhanasekar ஓம் முருகா
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
21-ஜூலை-202012:21:27 IST Report Abuse
venkatan முருகன் அருளாலே,இந்த ஊழிக்காலத்தில் பக்தர்களை மீண்டும் மீண்டும் கந்த சஷ்டி வாசிக்க சொன்ன அவனை வணங்குவோம்..அரசு அன்று கொல்லும். தெய்வம் நின்று கொல்லும்."திருப்புகழை ப் பாடப்பாட வாய் மணக்கும்.எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X