உயரழுத்த மின் வடங்கள் பதிக்க எதிர்ப்பு தாம்பரத்தில் குடியிருப்போர் போர்க்கொடி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

தாம்பரம், மேற்கு தாம்பரத்தில், குடியிருப்பு பகுதிகளுக்குள், உயர் அழுத்த மின் வடங்கள் பதிக்க, பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.சென்னை, தாம்பரம் நகராட்சியில், 2008ல் துவங்கி, 12 ஆண்டுகளுக்கு மேல், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.தடுப்புஇதற்காக, நகராட்சி பகுதி, 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தேவையான இடங்களில், கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.மேற்கு தாம்பரம், கல்யாண் நகரில், தாம்பரம் பெரிய ஏரியை ஒட்டி, கழிவு நீரேற்று நிலையம் கட்டப்பட்டு உள்ளது.இதன் அருகில், மின் மாற்றி அமைத்து, மின் இணைப்பு வழங்க, குடிநீர் வாரிய அறிவுரைப்படி, நகராட்சி நிர்வாகம் சார்பில், 2.32 லட்சம் ரூபாய், சேவைக் கட்டணமாக, தாம்பரம் மின் கோட்ட அலுவலகத்தில், மே, 12ல் கட்டப்பட்டது.தொடர்ந்து, மின்மாற்றி அமைத்து, மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில், பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:புதிய மின் மாற்றி அமைய உள்ள இடத்தின் பின்புறம், நகராட்சி பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றின் அருகிலேயே, கல்யாண் நகர், இரண்டாவது தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, மின் இணைப்பு வழங்கும், மின் மாற்றி ஒன்று உள்ளது.முடிவுபுதிதாக அமைய உள்ள மின் மாற்றிக்கு, இதில் இருந்து, 500 முதல், 600 அடி துாரத்திற்குள், புதைவட மின் கம்பிகள் வாயிலாகவே, இணைப்பு வழங்க முடியும்.அதை தவிர்த்து, கல்யாண் நகர், இரண்டாவது குறுக்குத் தெரு மற்றும் மூன்றாவது தெருக்களில் உள்ள, பழைய மின் கம்பங்களை அகற்றி, 800 மீட்டர் முதல், 1 கி.மீ.,க்கு, புதிதாக, எட்டு மின் கம்பங்கள் அமைத்து, உயர் அழுத்த மற்றும் வீடுகளுக்கான மின் வடங்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது.எங்கள் பகுதியை தவிர, அருகில் உள்ள சில தெருக்களுக்கு புதை வட மின் கம்பங்கள் வழியாக தான், மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.எங்கள் தெருக்களில், புதைவட மின் வடங்கள் பதிக்க, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, நிதி பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்தனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின் இணைப்பிற்கான கட்டணம் மட்டுமே, நாங்கள் செலுத்தினோம்; மின்வழித்தடத்தை, மின்வாரிய அதிகாரிகள் தான், முடிவு செய்தனர்' என்றனர்.இதனால், செய்வது அறியாது தவித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X