தமிழ்நாடு

பரிசோதனை செய்தால் வெளியே செல்லாதீர்: வியாபாரிகளுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சென்னை, ஊரடங்கு தளர்வுக்கு பின், வணிக நிறுவனங்களில் பணி புரிவோருக்கு பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. சில வியாபாரிகள், ஒத்துழைக்காமல் அலட்சியப்படுத்துவதாக, அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.சென்னையில், கொரோனா பாதிப்பை கண்டுபிடித்து பரவலை தடுக்க, அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக, அதிக எண்ணிக்கையில், கடைகளில் பணிபுரிபவர்களுக்கு பரிசோதனை நடக்கிறது. ஒரு கடையில், ஐந்து பேர் பணி புரிந்து, ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டால், மற்றவர்களை வீட்டு தனிமையில் இருக்க, அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்; கடையையும் பூட்ட வேண்டும்.ஆனால், தொற்றால் பாதிக்கப்படாத சிலர், சுதந்திரமாக ஊர் சுற்றுவதாக புகார் எழுகிறது. இவர்களால், மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளதால், வியாபாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.ஊரடங்குஇது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக, ஒருவருக்கு பரிசோதனை செய்தால், முடிவு தெரியும் வரை வெளியே செல்லக்கூடாது என, வலியுறுத்துகிறோம்.ஊரடங்கு தளர்வுக்குபின், பணிக்கு செல்வோர் அதிகரித்ததால், வணிக நிறுவனங்களில் பணி புரிவோருக்கு, அதிக பரிசோதனை செய்கிறோம். இதில், ஐந்து பேரில், ஒருவர் என்ற வீதத்தில் தொற்று பாதிப்பு இருக்கிறது.கடையில், ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிக்காத மற்றவர்களை அவர்களாகவே தனிமைப்படுத்த வலியுறுத்துகிறோம். பலர் கேட்பதில்லை. ஒத்துழைப்பு'பரிசோதனை முடிவு தெரியும் வரை, வேலைக்கு செல்லாதீர்கள்' என, கூறினாலும், அலட்சியமாக உள்ளனர்.இவர்களால், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், யாரையெல்லாம் சந்தித்தனரோ, அவர்களுக்கெல்லாம் தொற்று பரவ வாய்ப்புள்ளது. போதிய ஒத்துழைப்பு கொடுத்து, நாங்கள் கூறும் அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், கடை உரிமையாளர்களுடன் பேசி ஒத்துழைப்பு கொடுக்க வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X