தொற்றால் பாதிக்கப்பட்ட 3.61 லட்சம் பேர் கண்காணிப்பு| Dinamalar

தொற்றால் பாதிக்கப்பட்ட 3.61 லட்சம் பேர் கண்காணிப்பு

Added : ஜூலை 21, 2020
Share

சென்னை:சென்னையில், கொரோனா பாதிப்பு, அவர்களுடன் தொடர்பு என, 3 லட்சத்து, 61 ஆயிரத்து, 80 பேர் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில், கொரோனா பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதி, கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, நேற்று வரை, 188 தெருக்கள் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 94 ஆயிரத்து, 89 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த, ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 405 பேர், தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், வெளி ஊர்களில் இருந்து வந்த, 39 ஆயிரத்து, 67 பேர்; காய்ச்சல் முகாமில் அறிகுறிகளுடன் கண்டறியப்பட்ட, 25 ஆயிரத்து 466 பேர்; கொரோனா பரிசோதனை செய்து, முடிவுகளுக்கு காத்திருப்போர், 34 ஆயிரத்து, 455 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி, மாநகராட்சியில், 3 லட்சத்து, 61 ஆயிரத்து, 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.மேலும், 6 லட்சத்து, 4,237 பேர், வீட்டு கண்காணிப்பு முடிந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிஉள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X