சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூந்தமல்லி நகராட்சியில் தொற்று 450 ஆக உயர்வு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

பூந்தமல்லி ;பூந்தமல்லி நகராட்சியில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 450 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சியில், கொரோனா எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. சென்னைக்கு சென்று வருபவர்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்பவர்களே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது.இந்த அதிகரிப்பை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லியில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்பவர்களை, அந்தந்த நிறுவனங்களே, தனியாக தங்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.இதை, எந்த நிறுவனமும் கடைப்பிடிக்கவில்லை. அதேநேரத்தில், சில நாட்களாக பரிசோதனையும் அதிகமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 450 பேர், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தொடரும் பட்சத்தில், மாவட்டத்திலேயே, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், பூந்தமல்லி நகராட்சி முதலிடம் பிடிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X