தமிழ்நாடு

கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவால்..! மதுரையில் நகைக்காக பெண்கள் கொலை

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
கொலையாளிகளை  கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவால்..! மதுரையில் நகைக்காக பெண்கள் கொலை

மதுரை மதுரையில் நகைக்காக பெண்கள் கொலை செய்யப்படும் வழக்குகளில் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் பழைய சம்பவங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது போலீசாருக்கு சவாலாகவே இருக்கிறது.

நேருநகர் பஞ்சவர்ணம் 65, கொலை வழக்கும் சவாலாகவே உள்ளது.ஜூலை 16ல் பைபாஸ் ரோடு நேரு நகரில் பகல் 1:10 மணிக்கு வீடு புகுந்து பஞ்சவர்ணத்தை 2 பேர் கொலை செய்து 5 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இவ்வழக்கில் இதுவரை 'க்ளூ' கிடைக்கவில்லை.போலீசார் பல கோணங்களில் விசாரித்தும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. கடந்த காலங்களிலும் இத்தகைய நிலையை நகர் போலீசார் சந்தித்துள்ளனனர். ஐந்தாண்டுகளுக்கு முன் தெப்பக்குளம் ஸ்டேஷன் நவரத்னபுரத்தில் தாயும், 7 வயது மகனும் கொலை செய்யப்பட்டனர். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இரு ஆண்டுகளாகியும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. உதவிகமிஷனர் திருமலைக்குமார் தலைமையிலான குழு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரித்து, கொலையானவர்களின் குடும்பத்தினரிடம் தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்த 2 பேரை கைது செய்தது. சிந்தாமணி ரோட்டில் பகலில் வீடு புகுந்து மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தனர். இவ்வழக்கும் போலீசிற்கு சவாலாக இருந்தது. இதனால் நகரில் 'அதி தீவிர குற்றத்தடுப்பு' பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை இப்பிரிவு விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும். இப்பிரிவும் பல கோணங்களில் விசாரித்தும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன் தான் வாழைத்தோப்பு பகுதியினர் சிலரை கைது செய்தனர்.பஞ்சவர்ணம் வழக்கும் சில ஆண்டுகளுக்கு இழுக்காமல் எஸ்.எஸ்.காலனி, அதி தீவிர குற்றத்தடுப்பு, ரவுடிகளை கண்காணிக்கும் பிரிவு என அனைத்து பிரிவினரும் இணைந்து கூட்டு முயற்சியாக விசாரித்தால் உடனடியாக கொலையாளிகளை கைது செய்யலாம். இதுகுறித்து கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணைகமிஷனர் பழனிகுமார் பரிசீலிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X