தடையை மீறி தர்ப்பணம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement


மதுரை: கொரோனா ஊரடங்கால் ஆடி அமாவாசையான நேற்று நீர் நிலைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. யானைக்கல் பகுதி வைகையாற்றில் சிலர் தடையை மீறி தர்ப்பணம் கொடுத்து கொண்டிருந்தனர். புரோகிதர் உள்ளிட்டோரை போலீசார்எச்சரித்து அனுப்பினர். அவர்கள்மீது நோய் தொற்று தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.மின்சாரம் தாக்கி வாலிபர் பலிமதுரை: ஆரப்பாளையம் தாமஸ் பாளையம் ராஜ்குமார் 26. தேம்பாவணி அருகில் உள்ள சமூககூடத்தில் நேற்று காலை பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினார். அப்போது சீரியல் லைட்கள் மீது தண்ணீர் பட்டதில் மின்சாரம் தாக்கி இறந்தார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.43,232 பேர் கைதுமதுரை: மாவட்டத்தில் ஊரடங்கில் தடையை மீறி வலம் வந்ததாக இதுவரை 33,803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43,232 பேர் கைது செய்யப்பட்டனர். 11,243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.180 மது பாட்டில்கள் பறிமுதல்மதுரை: மாவட்டத்தில் தடையுத்தரவை மீறி மதுபாட்டில்கள் விற்றதாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 180 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 3,340 பறிமுதல் செய்யப்பட்டது.ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்மதுரை: தாசில்தார் நகரைச் சேர்ந்த 34 வயது பெண், அலுவலகம் ஒன்றில் வேலை செய்தபோது உடன் பணிபுரிந்த வெங்கடேஷின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் 'நெருக்கமாக' இருக்கும்போது வீடியோ எடுத்து அதை காண்பித்து ரூ.20 ஆயிரம் பறித்தார். பின்னர் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி நண்பர்அர்ஜூனுடன் 'நெருக்கமாக' இருக்க செய்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி அப்பெண் தற்கொலைக்கு முயன்றார். இருவர்மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தாய், மகன்களுக்கு அரிவாள் வெட்டுமேலுார்: மில்கேட் பகுதி நண்பர்கள்லோகேஷ் 25, தமிழ்செல்வன் 25. ஜூலை 18 ல் நண்பர்கள் இருவருக்கும் போதையில் தகராறு ஏற்பட மற்றொரு நண்பர் மணிகண்டபிரபு 24, விலக்கினார். ஆத்திரமுற்ற தமிழ்செல்வன், அவரது நண்பர்கள் சுதர்சன் 25, ஆசைதம்பி 33,பிரகதீஷ் 23, ஆகியோருடன் மணிகண்டபிரபு வீடு சென்றார். மணிகண்டபிரபு, அம்மா பூமாதேவி 47, தம்பி மதன்குமார் 19, மூவரையும்வெட்டி விட்டு தலைமறைவாயினர். மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.நகைகள் திருட்டுகள்ளிக்குடி: மையிட்டான்பட்டி பாஸ்கரன் 37, வெளியூரில் வேலை செய்கிறார். இவர் குடும்பத்தினர் மதுரைக்கு சென்ற நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4.5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.லாரி கண்ணாடி உடைப்புபேரையூர்: கேரளாவிலிருந்து இரண்டு லாரிகள் சரக்குகள் ஏற்றிக்கொண்டு பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டி வந்த போது முன்பக்ககண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்தனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வாலிபர் கொலையில் விசாரணைஅலங்காநல்லுார்: கல்லணை ரவிசந்திரன் மகன் விக்னேஷ் 24, நேற்று காலை சித்தி ஜமுனா 35, உடன் டூவீலரில் சென்ற போது, மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்றுகாயமுற்ற ஜமுனாசிகிச்சையில் உள்ளார். விக்னேஷின் அண்ணன் கிருஷ்ணகுமார் 28, மீது மதுரை ரவுடி கும்பலுடன் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. அவரை பழிவாங்க விக்னேஷ் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X