இந்தியா

கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து சுகாதாரத் துறையினர் போராட்டம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி,; கவர்னர் கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்து, சுகாதாரத்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணியாற்றினர்.புதுச்சேரியில் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. தினந்தோறும் வீடியோ கான்பிரன்ஸ் மற்றும் ஆடியோ கான்பிரன்ஸ் மூலம் அரசு அதிகாரிகள், போலீஸ், டாக்டர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வந்தார்.இந்நிலையில் கடந்த 18ம் தேதி, சுகாதாரத்துறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணியில் இருந்து துணை இயக்குநர் ரகுநாத்திடம் சராமாரியாக கேள்வி எழுப்பினார்.இது சுகாதாரத்துறையினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இரவு பகலாக வேலை செய்யும் சுகாதாரத்துறையிடம் கவர்னர் கிரண்பேடி நடந்து கொண்ட விதத்திற்கு, அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. நேற்று காலை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் என அனைவரும், கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X