இந்தியா

ரூ. 9,000 கோடிக்கான பட்ஜெட் முதல்வர் நாராயணசாமி தாக்கல்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

துச்சேரி; புதுச்சேரி சட்டசபையில், ரூ.9,000 கோடி்க்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. புதுச்சேரி சட்டசபையில் நடப்பு 2020-21ம் ஆண்டுக்கான ரூ. 9,000 கோடிக்கான பட்ஜெட்டை, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு: * புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்கள் அனைவருக்கும் குடிநீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. * 100 யூனிட் வரை பயன்படுத்தும் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.* மாணவர்களுக்கு தற்போது காலை வேளையில் பால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை, கருணாநிதி காலை சிற்றுண்டி மற்றும் ஊட்டச் சத்து திட்டமாக விரிவுப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கு காலையில் இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும். இந்த திட்டம் குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதி துவக்கப்படும்.* அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் இணையவழி கல்வி பயிலுவதற்கு வசதியாக அனைவருக்கும் அப்துல் கலாம் மாணவர்கள் கல்வி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விலையில்லா 'லேப் டாப்' வழங்கப்படும். * அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், சட்டக் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரிகள், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மருத்துவக் கல்லுாரிகளில் படிப்பதற்காக இந்த ஆண்டு விண்ணப்பக் கட்டணங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. * புதுச்சேரியில் ரேஷன் கார்டு உள்ள அனைத்து நபர்களும் மருத்துவ பயன் பெறும் வகையில் அனைவருக்குமான ஒட்டுமொத்த முழு சுகாதார பாதுகாப்பு திட்டம் துவக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X