கிராம பள்ளிகளில் மின்னணு வகுப்பறை | Dinamalar

இந்தியா

கிராம பள்ளிகளில் மின்னணு வகுப்பறை

Added : ஜூலை 21, 2020
Share

புதுச்சேரி; கல்வித்துறையை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ. 695.41 கோடி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை குறைக்கும் வகையில் தொலைக்காட்சி, சமூக வானொலி, இணைய வழி கற்பிக்கப்பட உள்ளது. இதற்காக அப்துல்கலாம் கல்வி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதற்காக அரசால் புதிதாக கல்வி தொலைக்காட்சி சேனல்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.பிரத்யோக சமூக வானொலி மூலம் புதிய வானொலி சேனல்கள் துவங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படும். இந்த திட்டங்கள் 4 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும். டிஜிட்டல் ஸ்டூடியோ ஒன்று பள்ளி கல்வித் துறையால் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் கல்வி மையங்கள் நிறுவப்படும்.மத்திய அரசு உதவியுடன் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் கிராமப்புற பள்ளிகளில் மின்னணு வகுப்பறைகள் இந்தாண்டு அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்பத்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளிகள், மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும்.மத்திய அரசு முன்மழலையர் வகுப்புகளை பள்ளி கல்வியுடன் இணைக்க ஆலோசனை வழங்கியுள்ளது.இதன் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடிகள் அருகாமையில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 அங்கன்வாடிகள், அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படும்.பள்ளி மேலாண்மை தொகுப்பு என்னும் இணையம் சார்ந்த நிர்வாக முறையை பள்ளி கல்வித் துறையில் அமல்படுத்த அரசு உத்தேசித்துள்ளது.இதன் மூலம் ஆசிரியர்களின் வருகை, பயிற்றுவிக்கும் முறைகள், மாணவர்களின் தேர்ச்சி செயல்பாடுகள், கற்றலின் முன்னேற்றம் இணையம் வாயிலாக பெற முடியும். நடப்பு நிதியாண்டு இத்துறைக்கு 695.41 கோடி ரூபாய் ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X