இந்தியா

'அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படும்'

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி பட்ஜெட்டில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி குறித்து இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:காமராஜர் மாணவர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் 31.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. பி.எச்.டி., ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்,ஆராய்ச்சி மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா 70,000 ரூபாய் இந்த ஆண்டில் வழங்கப்படும்.லாஸ்பேட்டையில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சமுதாயக் கல்லுாரி, இதர உயர் கல்வி மையங்கள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டு மையங்கள், மோதிலால் நேரு தொழில்நுட்ப கல்லுாரி, தொழில்நுட்ப பயிற்சி பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களை ஒருங்கிணைத்து, புதிதாக 'மகாத்மா காந்தி கல்வி நகரம்' நிறுவ, அதற்கான மாஸ்டர் பிளான் விரைவில் தயார் செய்யப்படும்.புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியை தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக தரம் உயர்த்துவதற்காக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். காமராஜர் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி,ஏனாம் பொறியியல் கல்லுாரி,புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லுாரிகளாக நடப்பு ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படும். அரசு பாலிடெக்னிக் பயிலகங்கள் அனைத்தும் இந்த புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்படும்.காரைக்கால் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், வேளாண் பொறியியல், பெட்ரோ-வேதிப் பொறியியல், உயிரி-மருத்துவ பொறியியல் போன்ற பாடப்பிரிவுகள் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இக்கல்லுாரியில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முதற்கட்டமாக 7 கோடி ரூபாய் ஒதுக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக துவங்கப்படும் ஏனாம் பொறியியல் கல்லுாரியில் ரோபோட்டிக் ஆட்டோமேஷன், 3 டி அனிமேஷன் கிராபிக்ஸ் ,டிஜிட்டல் டெக்னிக் பார் டிசைன், பிளானிங் ஆகிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படும். இக்கல்லுாரிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும்.காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தை மாநில அரசின் கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழக தரம் உயர்த்த கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.தேசிய கட்டடக்கலை பள்ளி ஒன்றை புதுச்சேரியில் நிறுவ மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தேசிய ஆடை வடிமைப்பு தொழில்நுட்ப மையம் ஒன்றை புதுச்சேரி மாநிலத்தில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில் கடந்த ஆண்டு 240 இடங்கள் அதிகரிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ரூமெண்டஷன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஆகிய மூன்று பாடப்பிரிவுகளில் கூடுதலாக 180 இடங்கள் அதிகரிக்க ஒப்புதல் பெறப்படும்.பி.டெக்., மெக்கட்ரானிக்ஸ், இன்னோவேஷன் என்டர்பிரனர் வென்சூர் டெவலப்மெண்ட் என்ற எம்.பி.ஏ., படிப்பு இந்தாண்டு துவங்கப்படுகிறது.புதுச்சேரி மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்டீரியர் டிசைன்(சிவில்) என்ற பாடபிரிவும், அரசு மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏர் கண்டீஷனிங்(மெக்கானிக்) பாடபிரிவும்காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் பயிலகத்தில் கம்யூனிகேஷன் பாடப்பிரிவும், ஏனாம் அம்பேத்கர் பாலிடெக்னிக்கில் கிராபிக்ஸ் மல்டிமீடியா மொபைல் ஆப் டெவலப்மெண்ட் என்ற பாடப்பிரிவு இந்தாண்டு துவங்கப்படும்.மாகியில் புதிய சமுதாய கல்லுாரி புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் அமைக்கப்படும். உயர் மற்றும் தொழில்நுட்ப கல்விக்காக 272.36 கோடி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X