மின்துறை தொழிலாளர்களுக்கு | Dinamalar

இந்தியா

மின்துறை தொழிலாளர்களுக்கு

Added : ஜூலை 21, 2020
Share

புதுச்சேரி,; மின்துறை தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு விபத்து காப்பீடு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.மின்வெட்டு குறித்த தகவல் எஸ்.எம்.எஸ்.,மூலம் நுகர்வோர்களுக்கு தெரிவிக்கப்படும். ரூ.150 கோடி செலவில் 30 மெகாவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின் உற்பத்தி பேனல்கள் வீட்டு மின் நுகர்வோர்கள் மூலம் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பொறியியல் கல்லுாரியில் சூரிய தகடு அமைத்து 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2017-18 ம் ஆண்டு முதல் அனைத்து வேளாண் மின் நுகர்வோர்களுக்கும் 100 விழுக்காடு மின் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகை இந்தாண்டும் வழங்கப்படும்.மின் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணியின்போது மின் விபத்தினால் இறக்க நேரிடுகிறது. இந்த தொழிலாளர்களின் நலன் கருதி மின் துறை தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் அமல்படுத்தபடும்.நடப்பு நிதியாண்டு மின் துறைக்கு ரூ.1,736.87 கோடி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெருகி வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மூலம் ரூ.746.53 கோடி கடன் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X