இந்தியா

மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை உயர்வு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

பட்ஜெட்டில் மீன்வளத் துறை குறித்து இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:மீன்வளம், மீனவர் நலத் திட்டங்களையும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள திட்டங்களையும்,விவசாயிகள் கடன் அட்டை திட்டத்தையும் ஒருங்கிணைத்து சிங்காரவேலர் மீன்வள புத்தாக்க திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகை இந்த ஆண்டும் மீனவர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும். இதற்காக 22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை 5,500 ரூபாயிருந்து 6,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக நிதி 12.41 கோடி ஒதுக்கப்பட்டு,இந்த நிதி ஆண்டில் உடனடியாக வழங்கப்படும். அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் மாதங்களில் மீன் பிடி தொழில் செய்வதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு மீனவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணம் 2,500 ரூபாயில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.மீன்பிடி தடைக்காலங்களில் பழுது நீக்குவதற்காக பெரிய விசைபடகுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை போன்று, வெளிப்புற மோட்டார் பொருத்திய பைபர் படகுகள்,கட்டுமரங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுவதுடன், இதற்காக 1.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மீன்பிடி தடைக்காலங்களில் பதிவு பெற்ற மீன்பிடி மரம், இரும்பு, பைபர் விசைப்படகுகளுக்கு பழுது நீக்குவதற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவி 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும், பதிவு பெற்ற செதில் வலை விசைப்படகுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி இந்த நிதியாண்டில் வழங்கப்படும்.பதிவு பெற்ற மீன்பிடி விசைப்படகுகளுக்கு செய்யப்படும் காப்பீடு சந்தாத் தொகையில் இதுவரை திரும்பி அளிக்கப்பட்டு வந்த 75 விழுக்காடு தொகையை காப்பீடு கம்பெனிகளுக்கு மீன்வளத்துறையே செலுத்தும். இதற்காக தேவைப்படும் 46 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.ஈமச்சடங்கு நிதியுதவி 2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, முதியோர் ஓய்வூதியம் பெற்ற மீனவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும்.புதிதாக திருமணமானவர்கள், மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழைக்கால நிவாரணம் போன்ற நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஏதுவாக, அவர்களின் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பதிலாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருமண சான்றிதழின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதற்காக திட்ட அறிவிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.மீனவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம்,மீன்பிடி படகுகள் தரையிறங்கும் தளம், குளிர்சாதன ஆலை, மீன் அங்காடி போன்ற சொத்துகள்,தொடர்புடைய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஒரு பொதுவான சொத்து என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.நவம்பர் 21 ம்தேதி உலக மீனவர் தினத்தன்று புதுச்சேரியில் மீன்வள வளர்ச்சி கழகம் துவக்கப்படும். கண்ணா படகுகளை ஆழ்கடல் துாண்டில் படகுகள் அல்லது செவுள் வலை படகுகளாக மாற்றுவதற்கு 50 விழுக்காடு மானியமாக 5 லட்சத்திற்கு மிகாமல் உதவி செய்யப்படும்.காரைக்காலில் மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் மின்னணு முறையில் வணிகம் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.பெரிய காலாப்பட்டு,நல்லவாடு,தேங்காய்திட்டு ஆகிய மீனவ கிராமங்களில் மீன் தரை இறக்கும் மையங்கள் முறையே10.17 கோடி,10.51 கோடி,31.10 கோடி செலவில் நிறுவவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 407 இயந்திர பொருத்திய கட்டுமரங்கள் பயன் பெறும்.120 மீனவ மகளிர் மற்றும் 1000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி நகராட்சி மூலம் நெல்லித்தோப்பில் ஒரு சில்லறை மீன் அங்காடி அமைக்கப்பட உள்ளது.காரைக்காலில் கலைநயம் மிக்க மொத்த வியாபார மீன் அங்காடி ஒன்றும் கட்டப்படும்.காரைக்கால் பட்டிண சேரியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும்.காரைக்கால், மாகே, ஏனாம்,புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தின் ஆற்று பகுதிகளில் துார்வார உத்தேசிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பிரதம மந்திரியின் மட்சிய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் 100 விழுக்காடு நிதியுடன் புதுச்சேரியில் ஒரு மீனவ கிராமம்,காரைக்காலில் ஒரு மீனவ கிராமம் 7.50 கோடி செலவில் ஒருங்கிணந்த நவீன கடலோர மீன்பிடி கிராமங்களாக உருவாக்கப்படும்.ஏனாம் பகுதியில் ஒருங்கிணைந்த அக்குவா பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதன் மூலம் ஒரே இடத்தில் தரமான மீன்,இறால் விதை உற்பத்தி,வளர்ப்பு முறைகள்,பதப்படுத்தல்,தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X