ஆக.,5ம் தேதி வரை திருப்பதியில் முழு ஊரடங்கு| Intense lockdown in Tirupati till August 5 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆக.,5ம் தேதி வரை திருப்பதியில் முழு ஊரடங்கு

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (1)
Share
Tirupati ,Andhra pradesh, lockdown, coronavirus, திருப்பதி, ஊரடங்கு, சித்தூர், ஆந்திரா

திருப்பதி: திருப்பதியில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, இன்று(ஜூலை 21) முதல் ஆக.,5ம் தேதி வரை 15 நாள் முழு ஊரடங்கு பிறப்பித்து சித்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோவிலில், மடப்பள்ளி ஊழியர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், ஜீயர்கள் என, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. திருமலை ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்த, முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார். இது, தேவஸ்தானத்தில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக பலியானது.


latest tamil news15 நாள் முழு ஊரடங்கு:


இந்நிலையில் திருப்பதியில் முழு ஊரடங்கு பிறப்பித்து, சித்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சித்துார் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா கூறியதாவது: சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் கூடிக் கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த, திருப்பதியில் இன்று முதல் ஆக., 5ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே உணவங்கள், கடைகள் திறந்திருக்கும். அதன் பின் பால், மெடிக்கல் ஷாப்கள் மட்டுமே திறக்க அனுமதி உண்டு. திருப்பதியில் வசிப்பவர்கள், 11 மணிக்கு பின் வெளியில் நடமாட அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழு, முன்னாள் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், ஆந்திர அரசு, திருப்பதி ஏழுமலையான் தரிசன அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X