புதுச்சேரி கவர்னர் - முதல்வர் மோதல்: விடிய, விடிய நடந்த கடிதப் போர்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுச்சேரி ; கவர்னர் - முதல்வர் இடையிலான கடிதப் போர் அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.கவர்னர் கிரண்பேடி நேற்றுமுன்தினம் இரவு முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.கடிதத்தில், 'பட்ஜெட் மற்றும் மான்யக் கோரிக்கைகள் (துறைவாரியான நிதி ஒதுக்கீடு) குறித்த விபரங்கள் எனக்கு அனுப்பப்படவில்லை. இது, விதிமீறலாகும். பட்ஜெட் மற்றும் மான்யக் கோரிக்கைகள்
Puducherry Budget Session, Governor Bedi, Lt Governor Bedi, Puducherry, புதுச்சேரி கவர்னர் - முதல்வர் மோதல்:  விடிய, விடிய நடந்த கடிதப் போர்

புதுச்சேரி ; கவர்னர் - முதல்வர் இடையிலான கடிதப் போர் அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.கவர்னர் கிரண்பேடி நேற்றுமுன்தினம் இரவு முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

கடிதத்தில், 'பட்ஜெட் மற்றும் மான்யக் கோரிக்கைகள் (துறைவாரியான நிதி ஒதுக்கீடு) குறித்த விபரங்கள் எனக்கு அனுப்பப்படவில்லை. இது, விதிமீறலாகும். பட்ஜெட் மற்றும் மான்யக் கோரிக்கைகள் விபரங்களையும் அனுப்பினால் வேறு தேதியை முடிவு செய்து, நான் உரையாற்றுகிறேன்; பட்ஜெட் தாக்கலும் செய்யலாம்' என தெரிவித்து இருந்தார்.அதிகாலை 3:30 மணிஇதற்கு பதில் அளித்து முதல்வர் நாராயணசாமி நள்ளிரவில் எழுதிய கடிதத்தில், 'பட்ஜெட் தொடர்பான கோப்பு உங்களது(கவர்னர்) ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நீங்கள் ஒப்புதல் அளித்த பிறகே, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.


latest tamil news
பட்ஜெட்டுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்துள்ள தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் உங்களிடம் பட்ஜெட் அனுப்ப வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. மான்யக் கோரிக்கைகள் குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்த பிறகே அனுப்ப முடியும். இதில் விதிமீறல் எதுவும் கிடையாது. மரபுப்படி கவர்னர் உரையாற்ற வர வேண்டும்' என, தெரிவித்து இருந்தார்.

இந்த கடிதம் அதிகாலை 3:30 மணியளவில் ராஜ்நிவாசுக்கு சென்று சேர்ந்துள்ளது.தொடர்ந்து, கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், 'எதிர்கால செலவினங்களை பற்றி திட்டமிடாமல், எந்தந்த துறைக்கு, எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என்ற விபரங்களை முடிவு செய்யாமல், எப்படி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்? அனுமதி பெற்றுதான் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் பட்ஜெட் விபரங்களையும், மான்யக் கோரிக்கைகளையும் அனுப்ப வேண்டும். அப்போதுதான் அதற்கு ஒப்புதல் தந்து, கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கலுக்கு புதிய தேதியை முடிவு செய்யலாம்' என தெரிவித்திருந்தார்.

இந்த கடிதம் முதல்வரை நேற்று காலை வந்தடைந்தது.தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக காலையில் ஆரம்பித்து, இரவு வரை சமூக வலைதளங்களில் கவர்னர் தனது கருத்துக்களை பதிவு செய்தவாறு இருந்தார்.சம்பளம் கிடைக்குமா? சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஆடியோ பேட்டியில் கவர்னர் கூறும்போது, 'சட்டம் மற்றும் விதிகளின்படி முதல்வரிடம் இருக்கும் பட்ஜெட் கோப்புகள் எனக்கு இன்னும் அனுப்பப்படவில்லை.

நமது சம்பளம், செலவுகள், ஓய்வூதியங்கள் போன்றவை ஆகஸ்ட் முதல் பாதிக்கப்படும். கவர்னர் மீதோ அல்லது இந்திய அரசு மீதோ குற்றம் சுமத்தக் கூடாது.கவர்னர் தாமதப்படுத்தியதாக முதல்வரோ, அமைச்சர்களோ குற்றஞ்சாட்டினால் அது தவறான செய்தியாகும். சட்டம் மற்றும் விதிகளின் கீழ், ஜனாதிபதியிடம் இருந்து பெறப்பட்ட பட்ஜெட் கோப்பை அவர் ஏன் இதுவரை எனக்கு அனுப்பவில்லை. நான் விதிகள் மற்றும் சட்டத்தை எழுதவில்லை. யூனியன் பிரதேச சட்டம் மற்றும் அலுவல் விதிகளை நாங்கள் அறிந்துள்ளோம்.எனவே, தாமதம் இங்கே இல்லை. உண்மையற்ற குற்றச்சாட்டுகளை எதையும் உள்நோக்கத்துடன் மக்கள் மத்தியில் பரப்ப கூடாது' என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜூலை-202017:47:44 IST Report Abuse
Endrum Indian இதற்கு சரியான தீர்வு இது ஒன்றே - நாராயணசாமியை லேபிடினண்ட் கவெர்னர், கிரண்பேடியை முதல்வராக சரியாக 1 மாதம் செய்ய வேண்டும். பிறகு பார்க்க வேண்டும் என்ன ஆகின்றதென்று
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
21-ஜூலை-202017:42:53 IST Report Abuse
vnatarajan கிரண் பேடியின் உடலில் ஒரு ஐ பி எஸ் அதிகாரியின் இரத்தம்தான் ஒடுகிறது. அவர் ஒரு கவர்னராக செயல்படுவதாக தெரியவில்லை. இருவரும் ஈகோவை தவிர்த்து புதுச்சேரி யூனியன் மக்களுக்காக செயல்படவேண்டும் நடுவண் அரசும் இந்த விஷயத்தில் மவுனமாக இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஜூலை-202015:47:00 IST Report Abuse
Natarajan Ramanathan எதிர்பாராமல் கிடைத்த பதவியில் இந்த ஆட்டம் போடுகிறார். புதுச்சேரி மற்றும் காரைக்காலை தமிழகத்துடனும் ஏனாமை ஆந்திராவுடனும் மாஹே பகுதியை கேரளத்துடனும் இணைப்பதே சிறந்தது.
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
21-ஜூலை-202016:58:53 IST Report Abuse
அறவோன்எதிர்பாராமல் உன் கும்பலுக்கு பதவி கிடைத்தால்தான் நீ இங்கு கமெண்ட்ஸ் போட முடிகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X