பொது செய்தி

இந்தியா

தனியாரிடம் செல்லும் அரசு வங்கிகள்; வங்கிகளை 5 ஆக குறைக்க அரசு திட்டம்?

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
banking, public sector banks, banks, தனியார், அரசு வங்கிகள், வங்கிகள், அரசு

புதுடில்லி: இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை 5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, சில வங்கிகளின் பங்குகளை தனியார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் வாராக் கடன் பிரச்னைகளாலும் போதிய மூலதனம் இல்லாமலும் வங்கிகள் தவித்து வருகின்றன. இதனால் வங்கித்துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் நலிந்த பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாக யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க், கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்கப்பட்டன. இது கடந்த ஏப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.


latest tamil news


இந்நிலையில், தற்போதைய நிலையில் 12 பொதுத் துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கிகளில் பாதி அளவு தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூசிஓ பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய வங்கிகளின் பெருமளவு பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி, ‛இனிமேல் வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதால், வங்கிகளின் பங்குகளை விற்க உள்ளதாகவும், நான்கு அல்லது ஐந்து பொதுத் துறை வங்கிகள் இருந்தால் போதும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,' கூறினார்.

வங்கித் துறையில் இந்த தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார்மயக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
24-ஜூலை-202000:43:54 IST Report Abuse
g.s,rajan India can also be Privatised, Government is not at all required . g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
samvijayv - Chennai,இந்தியா
22-ஜூலை-202005:59:41 IST Report Abuse
samvijayv 'SBI'., யையும் சேர்த்து இருந்தால் சற்று ஆறுதல் இருந்து இருக்கும்.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
21-ஜூலை-202023:10:13 IST Report Abuse
m.viswanathan ஏனைய வங்கிகளை தனியாரிடம் கொடுப்பதை விட பாரத ஸ்டேட் வங்கியை தான் தனியாரிடம் முதலில் கொடுக்க வேண்டும் . பணியாளர்கள் அனைவருமே வாடிக்கையாளரை மதிப்பதில்லை , எப்படியும் தனக்கு வர வேண்டிய ஊதியம் எதுவும் குறையாமல் வரும் என்கின்ற திமிர் , இவர்களுக்கு உண்மையிலேயே ஒரு பாடம் புகட்ட பட வேண்டும் , அம்பத்தூர் கிளையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் ஊழியர் வேலை செய்வதை பார்த்திருக்கிறேன் . காலை 10 மணிக்கு பணிக்கு வங்கி வாசல் வரை மிகவும் சோம்பேறி போல் தாமதமாக வந்து விட்டு , ( தினமும் தாமதம் , ஐந்து , பத்து நிமிடங்கள் ) கதவை திறந்து உள்ளே மிக அவசரத்தோடு இருக்கைக்கு ஓடுவார் . ஊழியர்கள் இப்பதான் இப்படியா இல்லை , எப்பவுமே இப்படி தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X