48 வயது பெண்ணுக்கு கொரோனா; புளியம்பட்டியில் தொற்று 4 ஆனது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

48 வயது பெண்ணுக்கு கொரோனா; புளியம்பட்டியில் தொற்று 4 ஆனது

Added : ஜூலை 21, 2020
Share

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி, செங்குந்தபுரம் வீதியை சேர்ந்த, 48 வயது பெண், ஸ்பின்னிங் மில் வேலைக்கு செல்கிறார். இரண்டு நாட்களுக்கு முன், காய்ச்சல் வந்ததால், சளி மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், பெருந்துறை அரசு மருத்துவமனை, கொரோனா சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், அருகில் வசிப்போருக்கு சளி மாதிரி சேகரித்தனர். இதையடுத்து செங்குந்தபுரம் வீதிகளை சுற்றியுள்ள பகுதிகள், தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது. அதேசமயம் இவரால், புன்செய்புளியம்பட்டி பகுதியில், தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X