சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பர்கூர் வனத்தில் தொடரும் மர்மம்: யானைகளை தொடர்ந்து கரடி சாவு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

அந்தியூர்: பர்கூர் வனப்பகுதியில், 15 வயதான கரடி மர்மமாக இறந்தது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட, தாமரைக்கரை வனப்பகுதியில், வன காவலர்கள் நேற்று காலை ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கரடி இறந்து கிடந்ததை பார்த்தனர். அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு நடந்தது. இதில் பெண் கரடி என்றும், 15 வயது இருக்கும் என்று தெரிவித்தனர். சரியாக உணவு உட்கொள்ளாமல், நோய் வாய்ப்பட்டு இறந்ததாக, வனத்துறையினர் தெரிவித்தனர். சமீப காலமாக பர்கூர் வனப்பகுதியில், யானைகள் மர்மமாக இறந்து வரும் நிலையில், அந்த வரிசையில் கரடியும் சேர்ந்துள்ளது. வழக்கம்போல் அதிகாரிகள் ஏதாவது காரணம் கூறி, முடித்துக் கொள்ளாமல், உரிய விசாரணை நடத்தி, மனித தவறுகள் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X