சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் கோர விபத்து: 2 வாலிபர்கள் நசுங்கி பலி

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் பட்டப்பகலில், வேன் மீது டூவீலர் நேருக்குநேர் மோதியதில், இரு வாலிபர்கள் உடல் நசுங்கி பலியானது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


பெருந்துறை அருகேயுள்ள திங்களூரை சேர்ந்தவர் நல்லசிவம், 26; திருப்பூரில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் குணபிரசாந்த், 25; டெய்லராக பணியாற்றி வந்தார். இருவரும் திருமணம் ஆகாதவர்கள். பஜாஜ் பல்சர் பைக்கில், திங்களூரில் இருந்து ஈரோட்டுக்கு, நேற்று மதியம் வந்தனர். வில்லரசம்பட்டி அருகே, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த ஈச்சர் வேன் மீது, டூவீலர் நேருக்கு நேராக மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும், சம்பவ இடத்தில் துடிதுடித்து பலியாகினர். கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் மீது டூவீலர் மோதியதாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார், உடல்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவரான, விஜயமங்கலத்தை சேர்ந்த கார்த்தி, 32, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
21-ஜூலை-202018:34:34 IST Report Abuse
Thanu Srinivasan விபத்துகளுக்கெல்லாம் கனரக வாகனங்கள்தான் காரணமல்ல. இந்த விபத்திலும் இறந்தவர்களின் கவன குறைவே காரணம். பலர் அதை நேரிலும் பார்த்துள்ளனர். ஆனால் நேரில் பார்த்த எவரும் சாட்சி சொல்ல முன்வர மாட்டார்கள். விபத்திற்கு கனரக வாகனத்தை ஓட்டியவரே காரணம் என்று பொய்யான சாட்சியங்கள் தயாரிக்கபட்டு லட்சகணக்கில் நஷ்ட ஈடு பெறப்படும்.ஆனால் இறந்தவர்கள் குடும்பதிற்கு பாதிகூட கிடைக்காது எஸ். ட்டி. ஸ்ரீநிவாஸன் 8667453478
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X