பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.67.53 லட்சத்துக்கு காய்கறி விற்பனை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சேலம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், 67.53 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகின.


சேலம் மாவட்டத்தின், 11 உழவர் சந்தைகளுக்கு நேற்று, 804 விவசாயிகள் கொண்டு வந்திருந்த, 233 டன் காய்கறிகள், பழங்களை, 53 ஆயிரத்து, 340 நுகர்வோர், 67 லட்சத்து, 53 ஆயிரத்து, 217 ரூபாய்க்கு வாங்கி சென்றனர். சேலம் மாநகரின், சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய நான்கு உழவர் சந்தைகளில், 120 டன் காய்கறிகள், 34 லட்சத்து, 47 ஆயிரத்து, 327 ரூபாய்க்கு விற்பனையானது. ஆத்தூர், இடைப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய ஏழு உழவர் சந்தைகளில், 113 டன் காய்கறிகள், 33 லட்சத்து, 5,890 ரூபாய்க்கு விற்பனையானது. மாதந்தோறும் நடக்கும் அமாவாசை நாட்களில் உழவர் சந்தைகளில், காய்கறிகள் விற்பனை, 70 லட்சத்தை தாண்டும். தை, ஆடி அமாவாசையின்போது, 85 லட்சத்தை தாண்டுவது வழக்கம். கடந்தாண்டு ஆடி அமாவாசையில், 84.10 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்ற நிலையில், கொரோனா ஊரடங்கால், நேற்று சேலம் மாவட்ட உழவர்சந்தைகளில், 67.53 லட்சத்துக்கு மட்டுமே காய்கறிகள் விற்பனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X