ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Added : ஜூலை 21, 2020
Share
சேலம்: ஆடி அமாவாசையான நேற்று, சேலம் கோவில்கள், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம், திதி கொடுத்தனர்.முன்னோர்களை வழிபட தை, ஆடி அமாவாசை நாட்கள் மிகவும் உகந்தது. இந்த நாட்களில், பொதுமக்கள் நீர் நிலைகளில் தர்ப்பணம், திதி கொடுத்து, கோவில்களில் வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆடி அமாவாசையான நேற்று, சேலம் சுகவனேஸ்வரர்

சேலம்: ஆடி அமாவாசையான நேற்று, சேலம் கோவில்கள், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம், திதி கொடுத்தனர்.


முன்னோர்களை வழிபட தை, ஆடி அமாவாசை நாட்கள் மிகவும் உகந்தது. இந்த நாட்களில், பொதுமக்கள் நீர் நிலைகளில் தர்ப்பணம், திதி கொடுத்து, கோவில்களில் வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆடி அமாவாசையான நேற்று, சேலம் சுகவனேஸ்வரர் கோவில், அணைமேடு பகுதியில் காலையில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். சிறிது நேரத்தில் மக்கள் கூடியதால், சமூக இடைவெளி காற்றில் பறந்தது. டவுன் போலீசார், தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். இதேபோல், காசி விஸ்வநாதர் கோவில், செவ்வாய்ப்பேட்டை அம்பலவாண சுவாமி கோவில்களின் நந்தவனங்களில், அதிகாலையில் பலர் தர்ப்பணம் கொடுத்தனர்.

* ஆடி முதல், மார்கழி மாதம் வரையிலான ஆறு மாத தட்சிணயான காலம், ஒவ்வொரு குடும்பத்திலும் முன்னோர்களின் வழிபாடு காலமாக கூறப்படுகிறது. இதில், ஆடி மாதம் அமாவாசை, இறந்த முன்னோர்களை வழிபாடு செய்யும் சிறப்பு நாளாகும். ஆடி அமாவாசையான நேற்று, மேட்டூர் காவிரியில் ஏராளமான பக்தர்கள், புனித நீராடி இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X