பல்கலை சிகிச்சை மையத்திலிருந்து 28 பேர் வீட்டுக்கு அனுப்பி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை சிகிச்சை மையத்திலிருந்து 28 பேர் வீட்டுக்கு அனுப்பி வைப்பு

Added : ஜூலை 21, 2020
Share

ஓமலூர்: கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து, 28 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேலம் பெரியார் பல்கலை விடுதியில், செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில், 176 பேர் இருந்தனர். நேற்று மதியம், 10 நாட்கள் சிகிச்சை முடிந்த, 28 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஜூலை, 10ல் இருந்து, புதிதாக இரண்டாவதாக, 120 படுக்கை வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ள கட்டடத்துக்கு, தொற்று ஏற்பட்டவர்களை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதில் நேற்று மதியம் வரை, 36 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். முதல் கட்டடத்தில் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிய பிறகு, அக்கட்டடத்தில் குழாய், மின்விசிறி, கழிவறை ஆகியவற்றின் பழுது நீக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மீண்டும், தொற்று உள்ளவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X