பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி குடிமராமத்து பணிக்கு தலைவாசலில் துவக்க பூஜை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
தலைவாசல்: தலைவாசல் அருகே, ஏரி குடிமராமத்து பணி பூஜையுடன் தொடங்கியது. தலைவாசல், புனல்வாசல் ஊராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த ஊர் ஏரி, பாசனம் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. நீர்பிடிப்பு மற்றும் கரைகளில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், நீர்பிடிப்பிற்கு இடையூறாக உள்ளது.

தலைவாசல்: தலைவாசல் அருகே, ஏரி குடிமராமத்து பணி பூஜையுடன் தொடங்கியது. தலைவாசல், புனல்வாசல் ஊராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த ஊர் ஏரி, பாசனம் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. நீர்பிடிப்பு மற்றும் கரைகளில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், நீர்பிடிப்பிற்கு இடையூறாக உள்ளது. இந்நிலையில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், ஏரியை ஆழப்படுத்துதல், கரை அகலப்படுத்துதல், வாய்க்கால் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, அதற்கான தொடக்க பூஜை நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X