பொது செய்தி

தமிழ்நாடு

சின்னமாரியம்மன் கோவில் எழுத்தர் 'டிஸ்மிஸ்'

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், சின்னக்கடை வீதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில் எழுத்தர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளார்.


ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, சின்னமாரியம்மன் கோவில் எழுத்தராக மாணிக்கம், 45, செயல்பட்டு வந்தார். இவர் மீது மோசடி, பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, கடமை தவறுதல் ஆகிய புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்திய, சேலம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர், கோவில் நிர்வாக அலுவலர் ஆகியோரை கொண்ட குழு மாணிக்கத்தை கடந்த, 2016ல், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டது. அதை ரத்து செய்யக்கோரி, மாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு, அறநிலையத்துறை அதிகாரிகளை அணுகி, பரிகாரம் தேடிக் கொள்ள உத்தரவிட்டது. 'சஸ்பெண்ட்' உத்தரவை எதிர்த்து, சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர், சென்னை கமிஷனர் ஆகியோருக்கு மேல் முறையீடு செய்தார். இரண்டு மேல் முறையீடு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மாணிக்கம் மீதான குற்றச்சாட்டுகள், நடவடிக்கைகள் குறித்து சின்னமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் புனிதராஜ் விசாரணை நடத்தி வந்தார். இதில், மாணிக்கம் பணியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, நம்பிக்கை மோசடி, கடமை தவறுதல், திறமையின்மை ஆகியன இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மாணிக்கத்தை கடந்த, 18ல், 'டிஸ்மிஸ்' செய்து செயல் அலுவலர் புனிதராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X