பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி பண்டிகை நடத்துவது குறித்து இன்று முக்கிய ஆலோசனை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், கொரோனா ஊரடங்கால் ஆடி பண்டிகையை கோவில் நிர்வாகங்கள் ரத்து செய்துள்ள நிலையில், பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று பண்டிகையை நடத்துவது குறித்து, இன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.


ஊரடங்கு படிப்படியாக விலக்கப்பட்டதால், புறநகர் பகுதியில் கோவில்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், மாநகர கோவில்கள் திறக்க தொடர்ந்து தடை அமலில் உள்ளது. சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட அனைத்து மாரியம்மன் கோவில்களின் ஆடி பண்டிகை ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. சேலம் மாவட்ட, பா.ஜ., முன்னாள் தலைவர் கோபிநாத், நேற்று கலெக்டர் ராமனிடம் அளித்த மனு விபரம்: சேலம் மாவட்டத்தின், 18 பட்டி மாரியம்மன் கோவில்களின் ஆடி பண்டிகை ஆண்டுதோறும் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், தீ மிதித்தல் தேர்பவனி, வண்டி வேடிக்கை ஆகிய நிகழ்வுகளுடன் நடப்பது வழக்கம். கொரோனா ஊரடங்கால், ஆடி பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தில்லை நடராஜ பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் வழக்கமாக நடக்கும் உற்சவங்கள், பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. அது போல் சேலத்திலும், பக்தர்கள் இன்றி பண்டிகையை பூசாரிகள், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்களை கொண்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி, சேலம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உமாதேவிக்கு, கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இன்று சேலம் மாநகர, மாவட்ட மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் கோவில்களின் நிர்வாக அலுவலர்கள், தக்கார்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பக்தர்கள் இன்றி, ஆடி பண்டிகை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X