பொது செய்தி

தமிழ்நாடு

மல்லூர் தி.மு.க., செயலர் திடீர் ராஜினாமா: கட்சியினர் எதிர்ப்பால் தலைமைக்கு கடிதம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சேலம்: மல்லூர், தி.மு.க., செயலர் நியமனத்துக்கு, கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மல்லுகட்டியதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.


சேலம் மாவட்டம், மல்லூர், தி.மு.க., செயலராக இருந்தவர் விஜயகுமார், 57. இவர், கடந்த, 18ல், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சீனிவாசன், 35, நியமிக்கப்பட்டார். இந்த மாற்றம் தி.மு.க.,வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கடந்த, 19ல், பொது உறுப்பினர் கூட்டம் நடந்தது. முன்னாள் செயலர் சுரேந்திரன், 53, தலைமை வகித்தார். ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு கேள்வி எழுப்பி, விஜயகுமாருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட பொறுப்பாளரை சந்திக்க, சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று, மல்லூர், தி.மு.க.,வினர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். இதுகுறித்து, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் கூறுகையில், ''தற்போது, கட்சி ஆரோக்கியமாக உள்ளது. அதனால், நிர்வாகி மாற்றத்துக்கு வாய்ப்பில்லை. ஆகாத சிலர், எதை வேண்டுமானாலும் கூறலாம்,'' என்றார். கடும் எதிர்ப்பு கிளம்பியதால், நேற்று நகர, தி.மு.க.,பொறுப்பாளர் பதவியை, சீனிவாசன் ராஜினாமா செய்து, கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X