ஓமலூர் பகுதியில் ஐந்து பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓமலூர் பகுதியில் ஐந்து பேருக்கு தொற்று

Added : ஜூலை 21, 2020
Share
ஓமலூர்: சிறுவன் உட்பட, ஐந்து நபர்களுக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. ஓமலூர், கோட்டமேட்டுப்பட்டி பல்பாக்கி பிரிவு உள்ள, 37 வயது ஆண், 35 வயது பெண் (கணவன், மனைவி) ஆகிய இருவருக்கும், தொளசம்பட்டியில், 25 வயது பெண், ஓமலூர் ஓம்சக்தி நகரில் உள்ள, 17 வயது சிறுமிக்கு நேற்று நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள், பெரியார் பல்கலை கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஓமலூர்: சிறுவன் உட்பட, ஐந்து நபர்களுக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. ஓமலூர், கோட்டமேட்டுப்பட்டி பல்பாக்கி பிரிவு உள்ள, 37 வயது ஆண், 35 வயது பெண் (கணவன், மனைவி) ஆகிய இருவருக்கும், தொளசம்பட்டியில், 25 வயது பெண், ஓமலூர் ஓம்சக்தி நகரில் உள்ள, 17 வயது சிறுமிக்கு நேற்று நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள், பெரியார் பல்கலை கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காடையாம்பட்டி தாலுகா, சுண்டைக்காபட்டியில், நேற்று முன்தினம். காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில், 30 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அதில், ஐந்து வயது சிறுவனுக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X