கர்நாடகாவில் இருந்து வந்த மீனவர்கள்; தனிமைப்படுத்தியது மேட்டூர் நகராட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் இருந்து வந்த மீனவர்கள்; தனிமைப்படுத்தியது மேட்டூர் நகராட்சி

Added : ஜூலை 21, 2020
Share

மேட்டூர்: கர்நாடகாவில் இருந்து மேட்டூர் திரும்பிய, 12 மீனவர்களை நகராட்சி தனிமைப்படுத்தியது.


கர்நாடகா, சாம்ராஜ்நகர் மாவட்டம், ஊகியம் பகுதியில், மேட்டூர் நகராட்சி, குள்ளவீரன்பட்டி பகுதியை சேர்ந்த, 12 மீனவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு சென்று, அப்பகுதியிலுள்ள ஏரி, குளங்களில் மீன் பிடித்தனர். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, ஊரடங்கு அமலில் இருந்ததால், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள், மீனவர்களை தனி வேனில், நேற்று மதியம் பாலாறு சோதனை சாவடி வரை அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, மற்றொரு வேனில் நேற்று மாலை அவர்கள் குள்ளவீரன்பட்டிக்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என, சந்தேகித்த நகராட்சி நிர்வாகம் தனிமைப்படுத்த முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று மாலை மேட்டூர் போலீஸ் பாதுகாப்புடன் மீனவர்கள், 12 பேரும் மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும், சிறப்பு வார்டிற்கு வேனில் அழைத்து சென்று தனிமைப்படுத்தப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X