பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பலியால் 14 நாட்களுக்கு பென்னாகரம் டவுனில் பொதுமுடக்கம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

பென்னாகரம்: பென்னாகரம் டவுன் பஞ்சாயத்தில், நேற்று ஒரே நாளில், இருவர் கொரோனாவால் இறந்ததால், டவுன் பகுதி, 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.


தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் டவுன் பஞ்சாயத்தில், நேற்று ஒரே நாளில், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில், 62, 68 வயதுடைய இரு முதியோர் உயிரிழந்தனர். இதையடுத்து, பென்னாகரம் டவுன் பகுதி முழுவதும், அடுத்த, 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. டவுனுக்கு வரும் தர்மபுரி சாலை, மேச்சேரி சாலை, ஏரியூர் சாலை, ஒகேனக்கல் சாலை என அனைத்து சாலைகளும் ஆட்கள் நடமாட முடியாத அளவுக்கு தடுப்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன. டவுன் பகுதி முழுவதும் தீயணைப்பு துறை வாகனம் மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை, மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார். அப்போது அவர் ஒலிப்பெருக்கி வாயிலாக பேசுகையில், ''பெங்களூருவில் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பதால், அங்குள்ள தர்மபுரியை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு வழியில் இ-பாஸ் பெறாமல், இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முறையாக பரிசோதனை செய்யாமல், சொந்த ஊருக்கு வருவதாலேயே, தொற்று பரவி வருகிறது,'' என்றார். இந்த ஆய்வின் போது, மாவட்ட எஸ்.பி., ராஜன், திட்ட இயக்குனர் ஆர்த்தி, பால் கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன், தாசில்தார் சேதுலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X