பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே பகுதியை சேர்ந்த இருவர் கொரோனா பாதிப்பில் பலி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனா பாதிப்பால், ஒரே பகுதியை சேர்ந்த, இருவர் இறந்தது, அப்பகுதியினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் முள்ளுவாடியை சேர்ந்தவர், 62 வயது ஆண்; அவர் கொரோனா பாதிப்பால், கடந்த, 14 முதல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாக மருத்துவத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், முள்ளுவாடியில் கொரோனா பரவல் ஏற்பட்டதால் கடந்த, இரு தினங்களுக்கு முன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அறிகுறி இல்லாத, 68 வயது ஆணுக்கு, கொரோனா தொற்று உறுதியானது. நேற்று காலை, மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவரை, தர்மபுரி, கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு, ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஒரே பகுதியை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து கொரோனாவால் இறந்ததால், முள்ளுவாடி மற்றும் பென்னாகரம் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில், நேற்று மொத்தம், 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X