சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தந்தை, மகன் தீக்குளிக்க முயற்சி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தந்தை, மகன் இருவரும் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.


தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று பகல், 1:30 மணிக்கு வந்த இருவர், திடீரென தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர்கள், கோவிந்தன், 62 மற்றும் அவரது மகன் திருவேங்கடமூர்த்தி, 39, என தெரிந்தது.

போலீசாரிடம் கோவிந்தன் கூறியதாவது: தர்மபுரி, ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வசிக்கிறோம். என் மகன் சென்னை, பெங்களூரு, ஓசூர், ராசிபுரம், தர்மபுரி உள்ளிட்ட, ஒன்பது இடங்களில் பியூட்டி பார்லர் தொழில் செய்து வருகிறார். தொழிலை மேம்படுத்த, தர்மபுரி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம், நான்கு ஆண்டுகளுக்கு முன், 38 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்கு வட்டியாக இதுவரை, மூன்று கோடியே, 96 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டார். ஆனாலும், இன்னும் ஒரு கோடியே, 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என, பைனான்சியர் கேட்கிறார். மேலும், என் மகன் வைத்திருந்த புல்லட்டையும் அவர் பறிமுதல் செய்து விட்டார். இந்நிலையில், மேலும் பணம் கேட்டு, குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, மாவட்ட நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், இது குறித்து விசாரிப்பதாகவும், மேலும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனவும் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X