சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி அரசு சீல் தயாரித்து சான்றிதழ் விற்பனை: கம்ப்யூட்டர் சென்டர் முதலாளி கைது

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

புன்செய்புளியம்பட்டி: அரசு முத்திரையை போலியாக தயாரித்து, சான்றிதழ் விற்பனை செய்த, கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.


ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, காவிலிபாளையம் அருகேயுள்ள, சின்னான்குட்டை கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி, நில உரிமை சான்று கேட்டு, காவிலிபாளையத்தில் உள்ள, கம்ப்யூட்டர் சென்டரில் ஆன் லைனில் விண்ணப்பித்தார். நான்கு நாட்கள் கழித்து சான்று பெற்ற அவர், புன்செய்புளியம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில், ஆவணங்களை பதிவு செய்தார். ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து பரிசோதிக்க, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பினர். இதில் நில உரிமை சான்று போலி என்பது தெரியவே, விவசாயியிடம் விபரம் கேட்டனர். காவிலிபாளையத்தில் கம்ப்யூட்டர் சென்டரில், சான்று பெற்றதாக கூறினார். இதையடுத்து கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, 40, என்பவரிடம், வருவாய் துறை அதிகாரிகள் விசாரித்தனர். இதில் அரசு முத்திரையை போலியாக தயாரித்து, கையெழுத்து போட்டு, போலியாக ஆவணம் தயார் செய்தது தெரியவந்தது. மேலும், வருவாய், பத்திர பதிவு, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் முத்திரைகளை தயார் செய்து, போலி சான்றிதழ் வழங்கி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, புன்செய்புளியம்பட்டி போலீசார், ராமசாமியை நேற்று பிடித்து, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராமசாமியின் கம்ப்யூட்டர் சென்டரில், 20 வகையான அரசு முத்திரையுடன் போலி சீல் கட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். யார் யாருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தார்; சான்றிதழ் பெற்றவர்கள் யார், என்பது குறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X