சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

தமிழகம் முழுவதும் கருப்பர் கூட்டம் நிர்வாகிகளை கண்காணிக்க உத்தரவு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சேலம்: சமூக வலைதளங்களில் ஹிந்து கடவுள்கள், புராணங்களை தவறாக சித்தரித்து படங்கள், கருத்துகளை வெளியிட்ட, கருப்பர் கூட்டத்தினருடன் தொடர்புடையவர்களை, கண்காணிக்க உளவு அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சென்னை, தி.நகரில் உள்ள யு டியூப் சேனல் மூலம், ஹிந்து கடவுள்கள் சிவன், சரஸ்வதி ஆகியவர்களின் புராண கதைகளை, ஆபாச ரீதியாக சித்தரித்து வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஹிந்து மதத்தின் பல்வேறு கடவுள்களை, இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வார்த்தைகளால் சித்தரித்தும், அவதூறு பரப்பப்பட்டு வந்தது. முருக கடவுளையும், கந்த சஷ்டி கவசத்தையும் அவதூறாக சித்தரித்தது, ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலுக்கு எதிராகவும், அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில், மாவட்டம், மாநகருக்கு தலா ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருப்பர் கூட்ட யு டியூப் சேனலுடன் மாவட்டம், மாநகர வாரியாக தொடர்பில் உள்ளவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க, உளவு அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர நுண்ணறிவு பிரிவு, மாவட்டத்தில் எஸ்.பி., தனிப்பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி., என்ற உளவுப்பிரிவு, மதம் சார்ந்த குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு, கடுங்குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு, க்யூ பிரிவு, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு என அனைத்து உளவு அமைப்புகளும், வாட்ஸ் ஆப் குழுக்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X