பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா அணைகள் நீர்திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்வரத்து உயர வாய்ப்பு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து, நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்வரத்து உயர வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம், 69.32 அடி, நீர் இருப்பு, 32.12 டி.எம்.சி.,யாக இருந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், இரண்டாம் கட்டமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவின் கபினி நீர்வரத்து வினாடிக்கு, 7,046 கனஅடியாகவும், கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, 14 ஆயிரத்து, 620 கனஅடியாகவும் அதிகரித்தது. அதற்கேற்ப இரு நாட்களுக்கு முன் வினாடிக்கு, 4,500 கனஅடியாக இருந்த கபினி, கே,ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து நேற்று, 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 3,600 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து, நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X