பொது செய்தி

இந்தியா

ம.பி., கவர்னர் லால்ஜி டாண்டன் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
MP Governor, Lalji, madhya pradesh, Lalji Tandon, PM Modi, மத்தியபிரதேசம், கவர்னர், லால்ஜி, காலமானார், பிரதமர், மோடி, இரங்கல்

போபால்: மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

மத்தியப்பிரதேச கவர்னரான லால்ஜி டாண்டன் (85) மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக கோளாறால் கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், உ.பி., கவர்னராக இருக்கும் ஆனந்திபென் பட்டேல், மத்திய பிரதேச கவர்னராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லால்ஜி, உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது மகன் அசுதோஷ், டுவிட்டரில் தெரிவித்தார்.


மோடி இரங்கல்


latest tamil news


லால்ஜிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், ‛உத்தரபிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த லால்ஜி, ஒரு திறமையான நிர்வாகியாக ஒரு அடையாளத்தை உருவாக்கினார். எப்போதும் பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அரசியலமைப்பு விஷயங்களை நன்கு அறிந்தவர்; வாஜ்பாயுடன் நீண்ட மற்றும் நெருக்கமான தொடர்பை கொண்டவர். துக்கமான இந்த நேரத்தில் அவரது குடும்பத்திற்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
21-ஜூலை-202017:55:38 IST Report Abuse
vnatarajan கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு கவர்னர் பதவி என்பது அவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு பரிசாக இருக்கிறது. திரு டாண்டன் ஒரு திறமைசாலியாக இருக்கலாம். அதற்காக வயது முதிர்ந்த காலத்தில் ஒரு பொறுப்புள்ள பதவியை கொடுத்திருக்கக்கூடாது. . இனிமேல் கவர்னர் பதவிக்கு எழுபது வயதை அதிகப்பச்ச வரம்பாக நிர்ணயிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
21-ஜூலை-202015:05:06 IST Report Abuse
Kumar மாபி ஆட்சி கலைப்பிற்கு ரொம்ப உரு துணையா ..கட்சிக்கு நின்றவர்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூலை-202014:15:54 IST Report Abuse
தமிழ்வேல் வயசானவங்களுக்கு இதுபோல போஸ்ட குடுத்து எதுக்கு அவங்களை கஷ்டப்படுத்தனும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X