பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் ஆக.,5 வரை முழு ஊரடங்கு அமல்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
திருமலை: திருப்பதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக.,5ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவில் கடந்த ஜூன் மாதம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. திருமலையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்த பின் கொரோனா தொற்று பரவ துவங்கியது. திருப்பதியிலும் நோய் தொற்று
திருப்பதி, ஊரடங்கு, அமல் கொரோனா, பாதிப்பு

திருமலை: திருப்பதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக.,5ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவில் கடந்த ஜூன் மாதம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. திருமலையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்த பின் கொரோனா தொற்று பரவ துவங்கியது. திருப்பதியிலும் நோய் தொற்று அதிகரித்தது. தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள் என இதுவரை 170 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று (ஜூலை 20) முன்னாள் பிரதான அர்ச்சகர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


latest tamil news



இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுவதாகவும், ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருப்பதியில் மட்டுமல்லாமல் சித்தூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று (ஜூலை 21) முதல் ஆக.,5ம் தேதி வரை திருப்பதியில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா அறிவித்துள்ளார்.

இந்த 15 நாட்களுக்கு காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் எனவும், 11 மணிக்கு மேல் பால் மற்றும் மருந்தகங்கம் மட்டுமே திறந்திருக்கும் எனவும், பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், காளஹஸ்தியிலும் கடந்த ஒரு வாரத்துக்கு முன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X