பொது செய்தி

இந்தியா

பலனளிக்கும் சிகிச்சையை பின்பற்ற வேண்டியது தானே!

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
விஜயபாஸ்கர், சீமான், நாம் தமிழர், பானுமதி, வீரமணி

'இதற்கெல்லாம் அனுமதி வேண்டுமா; எந்த சிகிச்சை பலனளிக்கிறது என அறிந்து, அதை பின்பற்ற வேண்டியது தானே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:

கொரோனா நோயாளிகளை, ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக அரசுக்கு கோரிக்கை விடுத்தால், அதற்கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது.

'இன்னும், 10 நாட்களில் தான், ஊரடங்கு முடிந்து, இயல்பான வாழ்க்கை துவங்கப் போகிறதே; கொஞ்சம் பொறுத்திருங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:

சாலை வரி, சுங்க வரி, மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் வரி காரணமாக, எளிய மக்களால் வாடகை வாகனத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல், கைவிடும் சூழலே நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வாடகை வாகன ஓட்டுனர்களின் குடும்பங்கள் பசியில் வாடுகின்றன.

'நீதித்துறை செயல்பாடு, எவ்வளவு, 'வேகத்தில்' இருக்கிறது என்பதற்கு, உங்கள் பேச்சு உதாரணமாக இருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி பேச்சு:


latest tamil news




தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான, கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரை கிராமத்தில் பிறந்தேன். எனக்கு, 2 வயதாக இருந்த போது, தந்தை விபத்தில் இறந்து விட்டார். இழப்பீடு கோரி, என் தாய் தொடர்ந்த வழக்கில், இறுதி வரை இழப்பீட்டு தொகை கிடைக்கவே இல்லை.

'உண்மை தான்...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி பேட்டி:

கொரோனா வை ஒழிக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கொரோனா பாதிப்பு அதிகரித்தால், ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

'கண்டிப்பது போல, காங்கிரஸ் குசும்பை காட்டுகிறீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, காங்., செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் அறிக்கை:

கந்த சஷ்டி கவசத்தை ஒரு அமைப்பினர் கொச்சைப்படுத்தியதற்கு, கடந்த, 17ம் தேதியே கண்டனம் தெரிவித்திருந்தேன். ஆனால், பா.ஜ.,வின், எச்.ராஜா ஏதோ, பா.ஜ.,வும் ஹிந்து அமைப்புகள் மட்டும் கண்டனம் தெரிவித்ததாக கூறியுள்ளார். எல்லாவற்றிலும் முந்திக் கொள்ளும் ராஜா, இதில் ஏன் அமைதி காத்தார் என, பா.ஜ.,வினரே வினவினர். தமிழக, பா.ஜ., தலைவர் பெயர் முருகன் என்பதால், அமைதியாக வேடிக்கை பார்த்தாரோ என்னவோ!

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
21-ஜூலை-202016:00:55 IST Report Abuse
S. Narayanan கொரோனா தமிழ் நாட்டில் குறைவுக்கு நம் உணவு கலாச்சாரமே உண்மை.
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
21-ஜூலை-202013:30:15 IST Report Abuse
Srinivas தமிகத்தில் இறப்பு சதவிகிதம் குறைவு. தொற்றும் குறைவு. வளர்ந்த நாடுகளால்கூட இந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்படும். பாதுகாப்பு கவச உடைகள் அதிக அளவில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஜூலை-202010:46:56 IST Report Abuse
Malick Raja ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி அவர்களின் வாழ்க்கை நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.. தனது ஈடில்லாத உழைப்பால் நீதியை பாரபட்சமின்றி முடிந்தளவில் செய்திருக்கிறார்.. இவர் நீதிபதியாக இருந்தபோது பிரேமானந்தா என்ற போலி சாமியாருக்கு 2. ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு சொன்னார் ..அது உயர் ,உச்ச நீதிமன்றங்கள் அனைத்திலும் மாற்றமில்லாமலேயே நடைமுறை படுத்தச்சொன்னார்கள்.. அன்று பிரேமானந்தாவுக்கு ஆதவராக ராம்ஜெத்மலானி வாதாட வந்தார்.. அவர் தனது காலை சற்று உயர்த்தி கட்டையின்மீது வைத்து வாதாடுகையில் முதலில் ஒழுக்கம் என்ற பண்பு பற்றி எடுத்துச்சொல்லி ராம்ஜேத்மலானிக்கு வகுப்பு நடத்தியவர் அத்துடன் ராம்ஜெத்மலானி தாம் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என்றார் இது என் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றம் என்று கண்டிப்புடன் சொன்னது அன்றைய செய்தித்தாள்களில் பரபரப்புடன் வந்ததாகும்.. அதே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகவும் ஆனது திருமதி பானுமதி அவர்களுக்கு தனிச்சிறப்பை ஏற்படுத்தியது.. தாய்மையின் எடுத்துக்காட்டுக்கு வாழ்த்துக்கள் அம்மா ...
Rate this:
21-ஜூலை-202012:52:58 IST Report Abuse
ஆரூர் ரங்ஆமாம். ஜல்லிக்கட்டுக்கு முதலில் தடைவிதித்த நேர்மையான நீதிபதி பானுமதி அவர்கள்....
Rate this:
Madhav - Chennai,இந்தியா
21-ஜூலை-202016:39:24 IST Report Abuse
Madhavஜல்லிக்கட்டு பைசா பிரயோஜனம் இல்லாத பெருமைக்கு எருமை மேய்க்கும் செயல். ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான A2 பால் போன்ற கதையாடல்கள் பொய்யானவை....
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
21-ஜூலை-202018:08:12 IST Report Abuse
தமிழ்வேள்அல்லேலூயாவின் அக்க்ப்போர்களை தடை செய்ய இயலுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X