பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலையில் 77 மி.மீ., மழை பதிவு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

மோகனூர்: நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில நாட்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல், விடிய விடிய நாமக்கல், கொல்லிமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், பரவலாக மழை பெய்தது. அதிகபட்சம், கொல்லிமலையில், 77 மி.மீ., பதிவாகி இருந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீ.,): குமாரபாளையம், 1.40, மோகனூர், 31.50, நாமக்கல், 68, சேந்தமங்கலம், 18, திருச்செங்கோடு, 43, கலெக்டர் அலுவலகம், 41.50, கொல்லிமலை, 77 என பதிவாகியிருந்தது. மாவட்டத்தின் மொத்த மழையளவு, 280.40 மி.மீ.,

* குமாரபாளையத்திலும், ப.வேலூரில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை, சூறாவளி காற்று வீசியது. சாலையில் வைக்கப்பட்டிருந்த மற்றும் கடைகளின் மேல் கட்டிவிடப்பட்டிருந்த பல விளம்பர பலகைககள் காற்றில் பறந்தன. கார்மேகம் வானத்தில் சூழ்ந்தது. பின்னர், இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது. சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X