பொது செய்தி

தமிழ்நாடு

'ஜீரோ ஹவர், ஜீரோ பவர்' என விமர்சனம்: நாமக்கல் எம்.பி., குறித்து பார்லி நெறிமுறை குழுவிடம் புகார்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

ராசிபுரம்: 'ஜீரோ ஹவர் என்பது ஜீரோ பவர்' எனக்கூறிய, நாமக்கல் எம்.பி., சின்ராஜ் மீது, பார்லி நெறிமுறை குழுவிடம், முன்னாள் எம்.பி., சுந்தரம் புகார் அளித்துள்ளார்.


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, ஏ.டி.சி., டிப்போ, ஆட்டையாம்பட்டி பிரிவு, அணைப்பாளையம் ஆகிய நெடுஞ்சாலை பகுதிகளில், மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 'இந்த பாலங்களை நான்தான் கொண்டுவந்தேன்' என, நாமக்கல் எம்.பி., சின்ராஜ் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், 'இந்த பாலங்கள் வர நான் தான் நடவடிக்கை எடுத்தேன்; மேலும், இதுகுறித்து, பலமுறை, பார்லியில் ஜீரோ ஹவரில் பேசியுள்ளேன்' என, முன்னாள் எம்.பி., சுந்தரம் கூறியிருந்தார். இதை பார்த்த எம்.பி., சின்ராஜ், '1996ல், நான் சுயேச்சையாக ராசிபுரம் தொகுதியில் நிற்கவில்லை என்றால், சுந்தரத்திற்கு அரசியல் வாழ்வே கிடையாது. ஜீரோ ஹவர் என்பது ஜீரோ பவர். சுவற்றில் தனியாக பேசுவதும், ஜீரோ ஹவரில் பேசுவதும் ஒன்றுதான்' என, ஏட்டிக்கு போட்டியாக ஒரு வீடியோவை, யு டியூப் சேனலில், 'அ.தி.மு.க., எம்.பி.,க்கு கொங்கு எம்.பி.,யின் சவுக்கடி' என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், முன்னாள் எம்.பி., சுந்தரம், பார்லி நெறிமுறைக்குழுவிற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'ஜீரோ ஹவரில் முக்கிய பிரச்னைகளை உடனடியாக பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதை கொச்சைப்படுத்தும் விதமாகவும், பாராளுமன்ற மாண்பை குலைக்கும் விதமாகவும், நாமக்கல், எம்.பி., சின்ராஜ் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X