பொது செய்தி

தமிழ்நாடு

'108' ஆம்புலன்ஸ் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: தமிழகத்தில், 950க்கும் மேற்பட்ட, '108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர்கள் மற்றும் டிரைவர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மருத்துவ உதவியாளர்கள், 18 வயதிற்கு மேலும், 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். பி.எஸ்சி., நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம்., நிறைவு செய்திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு, 24 வயதிற்கு மேலும், 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக ஓட்டுனர் உரிமம் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் மற்றும் கனரக ஓட்டுனர் உரிமம் குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். உயரம், 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பணிநியமனம் செய்யப்படும். 12 மணி நேர, 'ஷிப்ட்' முறையில் பகல், இரவு என, பணியமர்த்தப்படுவர். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களுடன், நேர்முகத்தேர்வுக் வர வேண்டும். விபரங்களுக்கு, 91542 50563 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, மாவட்ட மேலாளர் உதயக்குமார், மண்டல மேலாளர் குமரன் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X