பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் அரசு கலை கல்லூரியில் சேர்க்கை; ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கரூர்: ''கரூர் அரசு கலைக்கல்லூரியில், இளங்கலை முதலாமாண்டு பட்டப்படிப்புக்கு மாணவ, மாணவியர், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்,'' என, கல்லூரியின் தேர்வு நெறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு சமீபத்தில் வெளியாகியது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அரசு கலை கல்லூரி, உதவி பெறும் சுயநிதி கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நேரிடையாக பெறாமல், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, மாநில கல்லூரி கல்வி இயக்குனரகம் சார்பில், மண்டல கல்லூரி கல்வி இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், www.tngasa.in மற்றும் www.tndceonline.org ஆகிய இணைய தள முகவரிகளும் வெளியிடப்பட்டன. ஆனால், நேற்று, கரூர் அரசு கலை கல்லூரிக்கு, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், இளங்கலை முதலாமாண்டு படிப்புக்கு விண்ணப்பிக்க வந்தனர். அப்போது, கல்லூரி நுழைவு வாயிலில் தேர்வு நெறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பேராசிரியர்கள், 'ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்' எனக்கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர்.

அப்போது, அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள, 109 கல்லூரிகளில் நடப்பாண்டு இளங்கலை பட்டப்படிப்பு, முதலாமாண்டு சேர ஆன்லைன் மூலம் மட்டுமே, மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க முடியும். கல்லூரிக்கு வர வேண்டாம். அந்த ஆன்லைன் முகவரியில், கல்லூரியில் உள்ள இடம் பற்றிய எண்ணிக்கை, கற்பிக்கப்பட உள்ள பாடப்பிரிவு, விடுதி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இ-சேவை மையங்கள், தனியார் கணினி மையங்களில் விண்ணப்பித்து கொள்ளலாம். 50 ரூபாய் கட்டணத்தை ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும். எஸ்.டி.,- எஸ்.சி., பிரிவு மாணவர்கள், பதிவு கட்டணமாக, இரண்டு ரூபாய் செலுத்த வேண்டும். கரூர் அரசு கலைக்கல்லூயில், 17 பாடப்பிரிவுகளில், 1,280 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X