பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ரேஸ் குழு செயல்பாடு: எஸ்.பி., துவக்கி வைப்பு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில், போலீஸ் ரேஸ் குழு செயல்பாடு துவக்க விழா, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருச்சி சரக போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லைக்குள், டி.ஐ.ஜி., உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் மற்றும் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில், போலீசார் அடங்கிய புதிய ரேஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த போலீசார், இருசக்கர வாகனத்தில், கையில் வாக்கி டாக்கியுடன், 24 மணி நேரமும் பணியில் இருப்பர். திருச்சி சரகத்துக்குட்பட்ட, ஐந்து மாவட்டங்களான திருச்சியில், 30, புதுக்கோட்டையில், 38, கரூரில், 17, பெரம்பலூரில், 8, அரியலூரில், 16 என, 109 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு வரும் தொலைபேசி தகவலையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று முதற்கட்ட விசாரணை செய்தல், மனுக்கள் மீதான நடவடிக்கையை கண்காணித்தல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக, சம்பவ இடம் சென்று விசாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் தொடர்பு கொள்ள திருச்சி சரக டி.ஐ.ஜி., அலுவலக எண், 0431-2333909, கரூர் மாவட்டம், 94981-81822 ஆகிய தொலைபேசி மற்றும் மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், எஸ்.பி., பகலவன், புதிய ரேஸ் குழு செயல்பாட்டை துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்ளிட்டபோலீசார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X