தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு; அமராவதி அணைக்கு அதிகரிப்பு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ள நிலையில், அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.


டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த மாதம், 12ல் மேட்டூர் அணையில் இருந்து, 3,000 ஆயிரம் கன அடி முதல், 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, ?ஹரங்கி, ?ஹமாவதி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து நீர்வரத்து குறைந்தது. மேலும், நடப்பு மாதத்துக்கு கர்நாடகா அரசு தர வேண்டிய, 34 டி.எம்.சி., தண்ணீரையும் திறந்து விடவில்லை. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், மளமளவென சரிந்தது. இதனால், குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீர், 15 ஆயிரம் கன அடியில் இருந்து, 10 ஆயிரம் கன அடியாக கடந்த, 16ல் குறைக்கப்பட்டது. இதனால், மாயனூர் கதவணைக்கு வரும், தண்ணீரும் படிப்படியாக குறைந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து, 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டபோது, மாயனூர் கதவணைக்கு சராசரியாக, 14 ஆயிரம் கன தண்ணீர் வந்தது. ஆனால், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 9,580 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 9,160 கன அடியும், இரண்டு பாசன வாய்க்காலில், 420 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

அமராவதி அணை நிலவரம்: நேற்று முன்தினம் காலை, அமராவதி அணைக்கு சராசரியாக, 200 கன அடி தண்ணீர் வரை வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 521 கன அடியாக அதிகரித்தது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 45.02 அடியாக இருந்தது. கரூர் மாவட்டத்தில், காவிரியாறு, அமராவதி ஆற்றை நம்பிதான், விவசாய சாகுபடி பணி நடக்கிறது. காவிரியாற்று பகுதிகளில், ஏற்கனவே குறுவை சாகுபடி பணி துவங்கியுள்ளது. அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், அந்த பாசன பகுதி விவசாயிகள், சாகுபடி பணிகளை விரைவில் துவக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X