பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணையில் தண்ணீர் திறக்க மனு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கரூர்: அமராவதி அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாய சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையில், 41 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து, 238 கன அடியாக உள்ளது. கடந்த மே மாதம் தாராபுரம் மேற்கு பகுதிக்கு உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதுபோல், கரூர் மாவட்டத்தில் பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் திறக்க வேண்டும். இதன் மூலம் பயிர்கள் மட்டுமல்லாது கால்நடைகளையும் காப்பாற்ற முடியும். திறக்கப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதிவரை செல்வதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அரசியல் தலையீடு காரணமாக, கரூரில் இருந்து தாராபுரத்திற்கு அமராவதி வடி நில கோட்ட அலுவலகம் மாற்றப்பட்டது. அதனை மீண்டும் கரூரில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X