பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய வருவாய் திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவி வெற்றி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

அரவக்குறிச்சி: அரசுப்பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசின் பங்களிப்புடன் மாநில அரசுகள் டிசம்பர் மாதம் தேசிய வருவாய் திறனாய்வு தேர்வுகளை நடத்தி வருகின்றன. அந்த தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்கள் தொடர்ந்து மேல்நிலை கல்வி கற்பதில் ஏற்படும் பொருளாதார ரீதியான இடர்பாடுகளில் இருந்து அவர்களை பாதுகாக்க மத்திய அரசு நான்கு ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் தலா, 12 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்வில், தமிழகத்தில், 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வில் தமிழக மாணவர்கள், 6,695பேர் வெற்றிபெற்றனர். இதில், அரவக்குறிச்சி ஒன்றியம், பள்ளபட்டியை அடுத்துள்ள அ.வெங்கிடாபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி கமலிமேரி, 14, வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுகளில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து, தலைமையாசிரியர் சாகுல்அமீது கூறுகையில், ''அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவ, மாணவியர் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளனர். இதனால் மேல்நிலைக் கல்வியை தொடராமல் விட்டு விடுகின்றனர். இந்த குறைகளை போக்க மத்திய, மாநில அரசுகள் இது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர்களை சோர்வடையாமல் ஊக்கப்படுத்தி வருகின்றன. எனவே, மாணவர்கள் அதிக அளவில் அரசு நடத்தும் திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X