சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நளினி தற்கொலை மிரட்டல் : அதிகாரிகள் விசாரணை

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
வேலுார்: வேலூர் பெண்கள் சிறையில், நளினி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் பெண்கள் சிறையில், தனி செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் செல்லில் இருந்து வெளியே செல்லாமல் இருக்க அவருக்கு உதவியாக சக கைதி ஒருவரை இருக்க சிறைத்துறை உத்தரவிட்டது. இதனால்

வேலுார்: வேலூர் பெண்கள் சிறையில், நளினி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் பெண்கள் சிறையில், தனி செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் செல்லில் இருந்து வெளியே செல்லாமல் இருக்க அவருக்கு உதவியாக சக கைதி ஒருவரை இருக்க சிறைத்துறை உத்தரவிட்டது. இதனால் கிருஷ்ணகிரியை சேர்ந்த, ராதா என்ற ஆயுள் தண்டனை கைதி, நளினியுடன் தங்கியிருக்கிறார்.latest tamil news
இந்நிலையில், நேற்று இரவு ராதாவுக்கும், நளினிக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து ராதா சிறை அலுவலர் அல்லிராணியிடம் புகார் செய்தார். இதனை, விசாரிக்க அல்லிராணி, நளினியின் அறைக்கு சென்றார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நளினி கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

இது குறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது: நளினிக்கும் அவரது அறையில் இருந்த மற்றொரு கைதியான ராதாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதை விசாரிக்க சிறை அலுவலர் அல்லிராணி சென்றார். அப்போது வாக்கு வாதம் முற்றியது. இதனால் நளினி சேலையால் தனது கழுத்தை இறுக்கியபடி தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். சிறிது நேரத்தில் அவரே சமாதானமாகி சென்றார். தற்கொலை செய்து கொள்ள அவர் முயற்சிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news
இது குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மத்திய, மாநில உளவுத்துறையினர், நளினி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக அறிக்கை அனுப்பியுள்ளனர்.

நளினியின் வக்கீல் புகழேந்தி கூறியது:
30 ஆண்டுகளாக சிறையில் நளினி பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். அவருடன் உதவியாக உள்ள கைதி ஒருவரிடம் சாதாரண பிரச்சனைகளுக்காக அவர் தற்கொலை முயற்சி செய்து கொள்ள வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து விவரம் அறிய வேலுார் சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதியை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் மொபைல் போனை எடுக்கவேயில்லை.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Panchalingam - Toronto,கனடா
21-ஜூலை-202021:35:32 IST Report Abuse
Siva Panchalingam விசாரணை செய்த விடயங்கள், குற்றம் தாக்குதல் செய்யப்பட்ட முறைகள், தீர்ப்புகள் என எல்லாவற்றிலும் பல தவறுகள் நடந்தது, நிரபராதிகள் தண்டனை அனுபவிக்கின்றார்கள் என அதனுடன் சம்பந்தப்படட அதிகாரிகள் கூட இன்று காலம் கடந்து சொல்லிகொண்டிருக்கும்போது வாய்க்கு வந்த வசனங்களை சொல்லுவதும் எழுதுவதும் தர்ம நெறி தவறிய ஒரு தப்பான விடயம். அறநெறி தவறும் வார்த்தைகள் மிக அபத்தனமானவை. .
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
21-ஜூலை-202020:53:21 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கொலைகாரி சாகட்டும் விடுங்கள். அந்தக் கிரிமினல் விடுதலை கேட்கும் அரசியல் தலைகள் அடங்கும்
Rate this:
Cancel
Shake-sphere - India,இந்தியா
21-ஜூலை-202020:23:13 IST Report Abuse
 Shake-sphere ஒரு வெளிநாட்டு கொலைகாரிக்கு இவ்வளவு பில்டப் தேவையா? சிறையிலே கல்யாணம் செய்து வைத்து சிறையிலே முதலிரவு கொண்டாடவைத்து சிறையிலே வாரிசு உற்பத்தி செய்யவைத்து கொலைகாரியின் மகளுக்கு இந்திய பாஸ்போர்ட் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து .............இந்தியாவில் மட்டுமே இது நடக்கும் ஏனனில் இந்திய சட்டம் அப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X