வீட்டிற்குள் சேற்று திருவிழாவை கொண்டாடிய தென்கொரிய மக்கள்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
South Korea, Mud Festival, Online, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, தென் கொரியா, சேறு, திருவிழா

இந்த செய்தியை கேட்க

சியோல்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாரம்பரிய சேற்று திருவிழாவை தங்களது வீடுகளில் கொண்டாடிய தென்கொரிய மக்கள், ஆன்லைனில் மற்றவர்களுடன் வீடியோவை பகிர்ந்து கொண்டனர்.

ஆசிய நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட உள்ளூர் பொருளாதாரத்தை புத்துயிர் பெறு செய்வதற்காக, தலைநகர் சியோலில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள போரியோங் பகுதியில் 1998ம் ஆண்டு டேச்சியன் கடற்கரையில் சேற்று திருவிழா துவங்கப்பட்டது.
போரியோங்கில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கோர் ஒன்று கூடி, சேற்றை ஒருவர் மீது மற்றொருவர் பூசியும், வாரி இறைத்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். சேற்றில் சறுக்கு விளையாட்டு, மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளும் களைகட்டும். மேலும் உடல் முழுவதும் சேற்றை பூசி கொள்வதால் தோல் நோய் அகலும் என தென்கொரிய மக்களிடையே ஆழமான நம்பிக்கை நிலவுகிறது. சேற்று திருவிழாவை காண்பதற்கு சர்வதேச சுற்றுலா பயணிகளும் படையெடுப்பது வழக்கம்.


latest tamil news



ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போரியோங் சேற்று திருவிழா ரத்து செய்யப்பட்டது. எனினும் தென்கொரிய மக்கள் தங்களது வீடுகளில், சிறிய குளியல் தொட்டியில் அமர்ந்தபடி, பல வண்ணத்திலான சேற்றை உடல் முழுவதும் பூசி கொண்டாடினர். போரியோங்கில் அமைக்கப்பட்ட பிரமாண்ட திரை மூலம், வீடுகளில் இருந்து கொண்டு, சேற்றை பூசி கொண்டாடும் வீடியோவையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஏராளமானோர் நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண சேற்றை பூசி கொண்டாடினர். பல பாடகர்கள், ஆன்லைனில் இசை நிகழ்ச்சி நடத்தினர்.


latest tamil news



'போரியோங் மண் திருவிழாவிற்கு செல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்டேன். ஆனால் என் அம்மா ஒரு சேற்று குளத்தை உருவாக்கியது மிகவும் நன்றாக இருந்தது' என 10 வயது சிறுமியான ஹான் சே-யூன் கூறினார். அவரது தாயார் கிம் யங்-ஆ கூறுகையில், 'என் வீடு அழுக்காக மாறியது. ஆனால் குழந்தைகள் அதை அனுபவிக்கிறார்கள். எனவே நான் மகிழ்ச்சியடைகிறேன் 'என தெரிவித்தார். யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிப்பரப்பட்ட சேற்று திருவிழாவை வெளிநாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X