தெ.ஆப்ரிக்காவுக்கு 20.6 மெட்ரிக் டன் மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
HIL, Malaria, India, South Africa, malaria, DDT, drug, எச்ஐஎல், மலேரியா, இந்தியா, தென்ஆப்ரிக்கா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு, 20.6 மெட்ரிக் டன் டிடிடி (DDT) மருந்தை எச்ஐஎல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.

மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான எச்ஐஎல் (இந்தியா) நிறுவனம், உலகளவில் டிடிடி மருந்தின் ஒரே உற்பத்தியாளராக உள்ளது. இந்த நிறுவனம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக, டிடிடி மருந்தை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும், 1954ம் ஆண்டில் துவக்கப்பட்டது. கடந்த 2019-2020-ல் நமது நாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு இந்த மருந்தை விநியோகித்துள்ளது. மேலும், ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.


latest tamil news



தென்னாப்பிரிக்க அரசின் சுகாதாரத் துறை மொசாபிக்கிற்கு அருகில் உள்ள 3 மாகாணங்களில் டிடிடி மருந்தைப் பயன்படுத்தி வருகிறது. இங்கு மலேரியாவால் பாதிப்பும், சில ஆண்டுகளாக இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்க அரசின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை எச்ஐஎல் நிறுவனம் அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X