ஹாங்காங் விவகாரம்; பிரிட்டனின் செயலுக்கு சீனா கண்டனம்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
China, UK, Hongkong, சீனா, பிரிட்டன், ஹாங்காங்

பெய்ஜிங்: ஒரு காலத்தில் பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங்கை தற்போது சீனா தன் வசப்படுத்தி அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த முயன்று வருகிறது. சீன அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் உள்ள ஜனநாயகவாதிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'ஒரு நாடு இரு சட்டம்' என்கிற ரீதியில் இயங்கிவந்த ஹாங்காங் சட்டம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு முழுவதுமாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீன கம்யூனிச அரசு முயல்கிறது. இதற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஜனநாயகவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சீனாவின் சர்வாதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஹாங்காங் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். தற்போது பிரிட்டன், சீனாவின் இந்த போக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


latest tamil news


சீன கம்யூனிச அரசு ஹாங்காங்கை தன்வசம் கையகப்படுத்த நினைத்தால் ஹாங்காங் உடனான ஒப்பந்தத்தை பிரிட்டன் முறித்துக்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இதற்கு தற்போது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் பிரிட்டனின் இந்த செயலுக்கு சீனா விரைவில் பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். பிரிட்டனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஹாங்காங் உடனான தொடர்பை முறித்துக்கொண்டன. சமீபத்தில் அமெரிக்கா, ஹாங்காங் உடனான வர்த்தகத் தொடர்பை முறித்துக்கொண்டது. இதனால் ஹாங்காங்கில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக ஹாங்காங் இருந்ததால் தற்போதும் பிரிட்டனின் ஆதிக்கத்திலேயே இருப்பதாக பிரிட்டன் நினைத்துவிட வேண்டாம் என சீனா பதிலடி கொடுத்துள்ளது. சீனா ஹாங்காங்கை கையகப்படுத்த முயலும் செயலுக்கு இவ்வாறாக தொடர்ந்து உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
21-ஜூலை-202021:58:14 IST Report Abuse
vnatarajan சீனாவின் சர்வாதிகார போககைப்பற்றி நம்மநாட்டு கம்ம்யூனிஸ்டுகள் வாய் திறந்து பேச மாட்டார்களா.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
21-ஜூலை-202019:51:43 IST Report Abuse
Chandramoulli ஒட்டுமொத்தமாக சீனாவிற்கு ஏகப்பட்ட நாடுகளில் ( இடங்களில் ) வாய்க்கால் தகராறு
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-ஜூலை-202019:42:24 IST Report Abuse
RajanRajan எங்கு பார்த்தாலும் இந்த சீன அத்துமீறல் என்பது அவர்களின் கொள்கை என்பதை ஊர்ஜித படுத்தி வருகிறது. எனவே உலக நாடுகள் ஒருங்கிணைந்து மொத்த சீன கம்யூனிசத்தை ஒழித்து சீனாவை ஒரு ஜனநாயக பாதைக்கு திருப்ப வேண்டும். அழிவை சந்தித்து தான் சீன திருந்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக தெரிகிறது. அண்டை நாடுகளை மிரட்டும் சீனாவின் போக்கு ஒடுக்க பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X