இதுதான் பா.ஜ., அரசின் சாதனைகள்: ராகுல் கிண்டல்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
BJP,Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,பா.ஜ,ராகுல்,ராகுல் காந்தி, Bharatiya Janata Party,

புதுடில்லி: நமஸ்தே டிரம்ப், மெழுகுவர்த்தி ஏந்துதல், ராஜஸ்தான் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் தான் கொரோனா காலத்தில் பிரதமர் மோடி அரசின் சாதனைகள் என ராகுல் கிண்டலடித்துள்ளார்.

ஆளும் பா.ஜ., அரசு மீது, சமீபகாலமாக காங்., எம்.பி., ராகுல் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். எல்லை பிரச்னை, பொருளாதாரம், கொரோனா குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவின் அடிப்படை தேவைகளை மத்திய அரசு மாற்றியமைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள ராகுல், மத்திய அரசின் தற்சார்பு கொள்ளை குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


latest tamil news



இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டதாவது: கொரோனா காலத்தில் அரசின் சாதனைகள்:

* பிப்ரவரி: நமஸ்தே ட்ரம்ப்
* மார்ச்: ம.பி., ஆட்சி கவிழ்ப்பு
*ஏப்ரல்: மக்களை மெழுகுவர்த்தி ஏற்றச்செய்தல்
* மே: அரசின் 6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
* ஜூன்: வீடியோ கான்பரன்ஸ் வழியாக பீகார் தேர்தல் பிரசாரம்
* ஜூலை: ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க முயற்சி

இந்த சாதனைகளால், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தற்சார்பு எய்தியது. இவ்வாறு ராகுல் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜூலை-202019:33:40 IST Report Abuse
skv srinivasankrishnaveni உங்க கச்சிலேந்து 100% கல்தா தருவாங்க பாத்துன்னேயிரு
Rate this:
Cancel
N S - Nellai,இந்தியா
22-ஜூலை-202013:33:06 IST Report Abuse
N S இவருக்கு பதில் இப்பொழுது குடும்பத்தின் கூலிகள் பசி யுடனும், சிபிலுடனும், அ(ஆ)ல்வாமுமாய் அறிக்கை விட தொடங்கிவிட்டார்கள்.
Rate this:
Cancel
Bharadwaj Narayanaswamy - Chennai,இந்தியா
22-ஜூலை-202006:34:42 IST Report Abuse
Bharadwaj Narayanaswamy முழுசா அம்பது சீட் கூட வெல்ல முடியவில்லை. காங்கிரசுக்கு மக்கள் கொடுத்துள்ள மதிப்பு அவ்வளவு தான். சும்மா பிஜேபி யையும் மோடியையும் தாக்குவதை நிறுத்திவிட்டு மக்களிடம் நல் மதிப்பு பெற பார். நீ இப்படி தொண்டை வரல கத்துவதால் பிஜேபி யின் மதிப்பு அதிக மாகத்தான் செய்யும். மக்களுக்கு இந்த கொரோன நேரத்தில் ஏதாவது நல்லது செய். அடுத்த முறை வோட்டாவது கிட்டும். உன் பேசை காங்கிரஸ் காரர்களே மதிப்பதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X